மாண்ட்ரேக் தமிழ் லினக்ஸ் இல்லம்


இந்த வலைதளத்தில் மாண்ட்ரேக் லினக்ஸ் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய செய்திகளை அறிய முடியும். இங்கு மாண்ட்ரேக் தமிழ் லினக்ஸ் பற்றிய எளிய அறிமுகம், தற்போதைய நிலை, இதில் நீங்கள் எப்படி பங்கெடுக்க முடியும், இதன் முக்கியத்துவம் ஆகியவை உள்ளன. மேலும் மாண்ட்ரேக் லினக்ஸை எப்படி பெறுவது என்பதை பற்றியும் அறியலாம்.


அறிமுகம்


மாண்ட்ரேக் லினக்ஸ் 1998 ஆம் ஆண்டு முதன் முதலாக லினக்ஸை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் மிகச்சிறந்த இயங்கு தளம் என புகழ் பெற்று இருந்தாலும் பயன்படுத்துவதற்கு கடினமாக இருந்தது. இந்த நிலையை மாற்றுவதே இதன் முக்கிய குறிக்கோளாக அன்று இருந்தது. இதன் மூலம் சாமானியரும் மிகச்சிறந்த மென்பொருட்களை தங்கள் கணினியில் முழு உரிமையுடனும், எளிதாகவும் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் மாண்ட்ரேக்சாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டது. உரைவழி மூலம் மட்டுமே லினக்ஸை பயன்படுத்த முடியும் என்ற நிலையை மாற்றி அனைத்து செயல்களையும் வரைவியல் வழியில் செய்யும் வழியில் கருவிகளை உருவாக்கி மிகச்சிறந்த சாளரைமப்போடு இணைந்த முதல் லினக்ஸ் மாண்ட்ரேக் தான். தமிழ் ஆதரவோடு வெளிவந்த முதல் கணினி இயங்கு தளம் மாண்ட்ரேக் லினக்ஸ்9.0 தான்.


தற்போதைய நிலை


மாண்ட்ரேக் லினக்ஸில் தமிழ் ஆதரவு முதன் முதலில் தகுதரத்தில் வெளியானது. ஆனால் மாண்ட்ரேக் லினக்ஸ் 9.1 முதல் தற்போதைய பணிகள் அனைத்தும் யுனிகோட் மூலம் நடைபெறுகிறது. தகுதரத்தில் செய்யப்பட்ட அனைத்து பணிகளும் யுனிகோடுக்கு மாற்றப்பட்டு விட்டது.

தற்போது உள்ளீடு ெசய்வதும் யுனிகோடுக்கு மாறிவிட்டது. மொழிபெயர்ப்பு இன்னும் முடியவில்ைல. மொழிபெயர்ப்பின் ஆகக் கடைசி நிலையை அதற்கான மாண்ட்ரேக் வலைப்பக்கத்தில் காணலாம்.


1. மாண்ட்ரேக் லினக்ஸ் மூலம் தகுதரத்தில் உள்ள அனைத்து தமிழ் வலைதளங்கைளயும் மேலோட முடியும். அதற்கான அனைத்து தமிழ் எழுத்துருக்களும் மாண்ட்ரேக் லினக்சுடன் வருகிறது.

2. நீங்கள் உங்கள் நன்பர்களோடும் உறவினர்களோடும் தமிழ் மொழியில் மடலாட முடியும். தமிழ் தட்டச்சு அல்லது தமிழ்நெட்99 விசைப்பலகையை பயன்படுத்த தெரிந்தால் போதும்.

3. உங்கள் அலுவலக கடிதப் போக்குவரத்து முதல் அலுவலக கணக்கு வரை அனைத்து கணினி தேவைகளையும் kஆபிஸ் அல்லது ஓபன்ஆபிஸ் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.பங்ெகடுத்தல்

தமிழ் லினக்ஸ் தற்போது தான் எளிதாக பயன்படுத்தப்படும் நிலைக்கு வந்துள்ளது. மேலும் சிறந்த தமிழ் ஆதரைவப் பெற குனோம் மற்றும் kde எனப்படும் kசாளரமைப்பும் முழுமையாக மொழிபெயர்க்கப் படேவண்டும்.

நீங்கள் இந்த முயற்சியில் பங்கெடுக்க விரும்பினால் தயவுசெய்து இந்த அறிமுக உரையை படித்து விட்டு அதில் கூறியுள்ள படி எங்களை தொடர்பு கொள்ளவும்.தமிழ்லினக்ஸ் பெறுவது எப்படி

நீங்கள் சென்னையில் வாழ்ந்தால் சென்னை லினக்ஸ் பயனீட்டாளர் குழுவிடம் கேட்டு பெறலாம்.